என்னவள் வருகை

என்னவள் வருகை

Sunday, January 7, 2007

என்னவள் வருகை-ஹென்றி கான்ஸ்டேபிள்(தமிழில்-ஸ்ரீராம்)


என்னவள் இதழ் பார்த்த ரோஜாபூவும்
வெட்கபட்டு வெட்கபட்டு செக்க சிவந்ததா?

இவளின் விரல் பார்த்த அல்லி பூவும்
மனம் குமுறி வெளுத்துபோனதா?

கதிரும் இவளும் ஒன்று என்று
பொன்னிதழ் பூவும் தேசம் கடந்ததா?

கருநீலபூவும் ரத்தம் தோய்ந்து
இதயம் அதிலே இருப்பதை கண்டதா?

மலர்களின் மாண்பு
இவளின் பண்பு..!

பூவை இவள் சுவாசம்
பூக்கள் அதன் வாசம்..!

விதை வளரும் நிலத்தின் இளம் சூடு
இவளின் கண்ணொளி வெப்பம்.

பூக்களுக்கு இறைத்த நீரே
இன்று பெய்யும் மழை.!

இவள் கண்மறைந்து போனதே
அருவியாய் என் கண்களில் இருந்து..!